டெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் இன்று தனது 80ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியின் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.
மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "சரத் பவாரின் பிறந்தநாளன்று அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வவல்லவரான நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க ஆசீர்வதிக்கப்படுவீர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பாஜகவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பினும், அனைத்து தலைவர்களுடன் நல்லுறவை பேணி வருகிறார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி!