தாவனகரே (கர்நாடகா): கர்நாடகாவின் தாவனகரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். கோவிட்-19 முழு ஊரடங்கின்போது விவேகானந்தின் குடும்பத்தினர் வீட்டில் முடங்கியதால், அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு முகக்கவசங்களை தயாரிக்கத் தொடங்கினர்.
ஊரடங்கின்போது அவர்கள் குடும்பம் கிட்டத்தட்ட 8,000 முகக்கவசங்களை தைத்தது. இதில் ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்கள் இருந்தன.
பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட 7,000 முகக்கவசங்கள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. பெரும் தேவை காரணமாக, அவர்கள் மீண்டும் 1,000 முகக்கவசங்கள் தைத்து பெயரளவுக்கு விற்றனர்.
இதற்கிடையில், விவேகானந்தனின் மகள்கள் காவ்யா மற்றும் நம்ரதா ஆகியோர் 20 ஆரஞ்சு, 10 வெள்ளை மற்றும் 10 பச்சை வண்ண முகக்கவசங்கள் அடங்கிய ஒரு பார்சலை ஸ்பீட் போஸ்ட் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தனர்.
காவ்யா ஆகஸ்ட் 13 ஆம் தேதி நரேந்திர மோடிக்கு பார்சலை அனுப்பினார். ஆனால் மூன்று வாரங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. பார்சல் பிரதமரை எட்டவில்லை என்று குடும்பத்தினர் நினைத்தனர். ஓரிரு நாள்களுக்குப் பிறகு, காவ்யாவின் நண்பர் கவிதா தேவி தயாரித்த முகக்கவசங்களை பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருக்கும் புகைப்படத்தை அனுப்பினார்.
இது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இரண்டு நாள்களில் காவ்யா மற்றும் நம்ரதாவுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது.
இது குறித்து விவேகானந்தன் கூறும்போது, 'ஊரடங்கினபோது, எங்களுக்கு ஒரு யோசனை வந்து முகக்கவசங்களை தயாரிக்க முடிவு செய்தோம். நாங்கள் 8,000 முகக்கவசங்களை உருவாக்கி 7,000 இலவசமாக வழங்கினோம். உயர்தர பருத்தி துணி மற்றும் கேன்வாஸைப் பயன்படுத்தி இந்த முகக்கவசங்களை வடிவமைத்துள்ளோம்.
இந்த முகக்கவசங்கள் கவர்ச்சிகரமானவை, எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது' என்று கூறினார்.
ஆகஸ்ட் 17 ஆம் தேதி பார்சல் பிரதமரை சென்றடைந்துள்ளது. ஆனால் எங்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் பின்னர் அவர் முகக்கவசம் அணிந்த புகைப்படத்தைக் கண்டோம், அவர் எங்களால் செய்யப்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்துவதைக் கண்டோம். எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை, 'என்றார் விவேகானந்தின் மகள் காவ்யா.
இதையும் படிங்க: ‘பிஎம் மோடி’ படம் மறு வெளியீடு - தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை : தேர்தல் ஆணையம்