பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில், இன்று (அக்.25) காலை 11 மணிக்கு மக்களுடன் உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாதவது, "நவராத்திரி, தசரா பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நீங்கள் அனைவரும் மிகுந்த கட்டுபாடுடன், கண்ணியத்தைக் கடைபிடித்து, இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடி வருகிறீர்கள். நாம் பண்டிகைகளைப் பற்றிப் பேசும்போது, அதில் சந்தைகள், பொருள்கள் கொள்முதல் இடம்பெறுகின்றன. உங்களுக்கும் என்னென்ன வாங்குவது என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால், இந்த முறை நீங்கள் பொருள்கள் வாங்கச் செல்லும்போது, Vocal for Local அதாவது உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுப்போம் என்ற உறுதிப்பாட்டை நினைவில் கொள்ள வேண்டும். உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முதன்மை அளிக்க வேண்டும். குறிப்பாக ஆடைகள் விழாக்களின் வெளிபாடு. அதற்காக நீங்கள் உள்ளூர் கதர் ஆடைகளுக்கு முன்னுரிமை அளியுங்கள்" எனத் தெரிவித்தார்.
அத்துடன் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் முடிதிருத்தம் நிலையம் நடத்திவரும் பொன் மாரியப்பன் என்பவரிடம் பிரதமர் பேசினார். உரையாடலின் தொடக்கத்திலேயே வணக்கம் பொன். மாரியப்பன்! நல்லா இருக்கீங்களா! எனத் தமிழில் பேசினார்.
மாரியப்பன் தனது சலூன் கடையின் ஒரு பகுதியில் நூலகத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சலூன் கடைக்கு வருபவர்கள் காத்திருக்கும்போது, அங்கேயே ஒரு புத்தகத்தைப் படிக்கிறார்கள். மாரியப்பனின் இந்த யோசனையை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.
இதையும் படிங்க: 70ஆவது மன் கி பாத்: பிரதமர் மோடி உரை