குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ பகுதிக்கு டிசம்பர் 15ஆம் தேதி செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "சுத்திகரிப்பு ஆலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலை உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் கட்ச் மாவட்டத்திற்கு மோடி செல்லவுள்ளார். அப்போது, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உடன் செல்லவுள்ளார்.
மாண்ட்வியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையின் மூலம் கடல்நீரை குடிநீராக மாற்ற குஜராத் மிக முக்கிய முயற்சியை எடுத்துள்ளது. ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் அளவுக்கு திறன் கொண்ட ஆலை அமைக்கப்படவுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.