நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல்செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, கடந்த மாதம் 31ஆம் தேதி இரு அவையினர் முன்னிலையிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் தனது உரையில், “சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளில் ஒரே மாதிரியான வளர்ச்சி சாத்தியமாக உள்ளது. இனி ஜம்மு காஷ்மீர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை விரைவாக எட்டும். இந்தியாவிலிருந்து இரண்டு லட்சம் இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்கின்றனர். அவர்களுக்கான நடைமுறைகள் டிஜிட்டல் முறையில் நடக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்த உரைக்கு பதிலுரைத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் நன்றி தெரிவித்தார். பட்ஜெட் முதலாவது கூட்டத்தொடர் வருகிற 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது கூட்டத்தொடர் அடுத்த மாதம் 2ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறும்.
இதையும் படிங்க : பட்ஜெட்டில் ரயில் பயணிகள் வசதிக்கு ரூ.6,846 கோடி ஒதுக்கீடு