கரோனா வைரஸ் (தீநுண்மி) நோயின் தாக்கம் காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்துவந்தனர். தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் அவலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியது.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 'கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டம்' வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை காணொலி வாயிலாக ஜூன் 20ஆம் தேதி அவர் தொடங்கிவைக்கவுள்ளார்.
பிகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுசில் மோடி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
ஐந்து மாநில முதலமைச்சர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள் ஆகியோர் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர். 116 மாவட்டங்களிலிருந்து 25,000 வெளிமாநில தொழிலாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இத்திட்டம் மூலம் 125 நாள்களுக்கு இவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். இதற்காக 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற வளர்ச்சி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, நிலக்கரி சுரங்கம், சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட 12 அமைச்சகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.
இதையும் படிங்க: நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடக்கி வைத்த மோடி