ETV Bharat / bharat

தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவில் சிறப்புரையாற்றவுள்ள பிரதமர் மோடி! - டெல்லி செய்திகள்

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு உரையாற்றுவார் என மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PM Modi to address National Youth Parliament Festival on Jan 12
தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவில் சிறப்புரை ஆற்றுவுள்ள பிரதமர் மோடி!
author img

By

Published : Jan 9, 2021, 6:25 PM IST

1984ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் ஜனவரி 12ஆம் தேதி தேசிய இளைஞர் நாளாக (National Youth Day) கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான அந்நாளை 1984ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, தேசிய இளைஞர் நாளாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து 1985ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.

தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவில் சிறப்புரை ஆற்றுவுள்ள பிரதமர் மோடி!
தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவில் சிறப்புரை ஆற்றவுள்ள பிரதமர் மோடி!

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில், மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் முன்னெடுப்பில் வரும் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கின் முகநூல்/ ட்விட்டர் பக்கங்களில் நேரலையின் வழியே காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேர்தல் களம் காணவரும் ஓய்வுபெற்ற நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.