உலக யோக தினமான ஜூன் 21ஆம் தேதி மக்கள் முன்பு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் இந்திய நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த உலக யோகா தின நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டு வருகிறார். அதன்படி, இந்தாண்டும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை லே பகுதியில் நடத்த கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்னர் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது லே பகுதியில் நீடித்துவரும் பதற்றச் சூழ்நிலை காரணமாக தலைநகர் டெல்லியில் இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில், சில யோகாசானங்களை அவர் செய்வார் என்றும், யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைதியை விரும்பும் இந்தியா, பதிலடி கொடுக்கவும் தயங்காது - சீனாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை