ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி 'மான் கி பாத்' (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த வகையில், இன்று காலை 11 மணிக்கு 'மான் கி பாத்' பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இதற்கு முன்னர், ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "இந்தப் புதிய தசாப்தம் உங்கள் அனைவருக்கும், இந்த நாட்டிற்கும் புதிய வெற்றியைத் தேடித்தரட்டும்.
உலகின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான திறனை இந்தியா கண்டிப்பாகப் பெறும். இந்த நம்பிக்கையோடு, புதிய தசாப்தத்தைத் தொடங்கலாம். புதுத் தீர்மானத்துடன் தாய் திருநாட்டுக்கு பணியாற்றுவோம் வாரீர்" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், நீர்வளங்களைக் காக்க மக்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும், பிரச்னைகளை வன்முறையின் மூலம் தீர்க்க நினைப்பவர்கள் அதனை விட்டொழித்து பணிக்குத் திரும்புமாறும் வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை இந்தியா வரவுள்ள நிலையில், அதுகுறித்து 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவதற்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : 'உலகளாவிய சிந்தனை, உள்நாட்டில் செயல்பாடு'- பிரதமர் மோடி குறித்து நீதிபதி அருண் மிஸ்ரா