ETV Bharat / bharat

மேற்கு வங்கம் நோக்கி திரும்பும் பாஜக கண்கள்!

author img

By

Published : Mar 9, 2020, 8:43 PM IST

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவின் கண்கள் மேற்கு வங்கம் நோக்கி திரும்பியுள்ளது.

PM Modi talks to West Bengal BJP MPs as party eyes the big state

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அஸாம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் அஸாம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்கட்சிக்கு இதுவரை ஒரு உறுப்பினர்கூட கிடையாது.

கேரளத்தை பொறுத்தமட்டில் அத்திபூத்தாற் போல் ஒரே ஒரு உறுப்பினர் (ஓ.பி. ராஜகோபால்) உள்ளார். எனினும் மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18ல் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

இதனால் அங்கு மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக மேலிடத் தலைவர்களுடன் மாநிலத் தலைவர் திலீப் கோஸ் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து பாஜக மக்களவை எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே ஆலோசித்துள்ளார். அப்போது அத்தொகுதி மக்கள் பிரச்னை, அரசியல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

இது 2020ஆம் ஆண்டு தேர்தலுக்கு பாஜக வைத்துள்ள குறி என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 295 தொகுதிகளில் 211 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் 70 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன. பாஜகவுக்கு மூன்று இடங்கள் கிடைத்தன. இத்தேர்தலில் 45 விழுக்காடு வாக்குகள் மம்தா கட்சிக்கு கிடைத்தது. ஆனால் இந்த நிலை மக்களவை தேர்தலில் மாறியது. பாஜகவின் வாக்குவங்கி கணிசமான உயர்வை சந்தித்தது.

இதையும் படிங்க : 'ஷோபியன் என்கவுன்டரில் 2 பிரிவினைவாதிகள் உயிரிழப்பு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.