உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியில் ரிக்ஷா ஓட்டுபவர் மங்கல் பிரசாத் கெவத். இவரின் மகளுக்கு இன்று (பிப்12) திருமணம்.
இந்த நிலையில் தனது மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.
இந்த அழைப்பிதழை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மணமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். மணமக்களுக்கு மோடி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், “அன்புள்ள மங்கல் பிரசாத் கெவத் அவர்களுக்கு,
புதிய பயணத்தைத் தொடங்கும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகள். இந்த நல்ல நேரத்தில், மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் நட்பு நிறைந்த வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து, இருவருக்குமிடையே தோழமை வலுவடைந்து, வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்கு வாழ்த்துகள். வாழ்த்துகளுடன்.. உங்கள் நரேந்திர மோடி”
எனக் கூறியுள்ளார்.