ETV Bharat / bharat

இந்திய இன நாய்கள் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளியுங்கள்- பிரதமர் மோடி - மனதின் குரல் நிகழ்ச்சி

டெல்லி: நமது நாட்டு மக்கள் மனதில் தற்சார்பு இந்தியா என்ற எண்ணம் மேலோங்கும் வேளையில், அனைவரும் நாட்டு இன நாய்கள் வளர்ப்பிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

pm-modi-recalls-bravery-of-dogs-urges-countrymen-to-bring-home-native-breeds

author img

By

Published : Aug 30, 2020, 10:30 PM IST

மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பேசிய மோடி, “சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, ​​பாதுகாப்புப் படையினரின் இரண்டு துணிச்சலான நாட்டு நாய்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

அவை தேசத்தை பாதுகாக்கும்போது தங்கள் கடமைகளை நிறைவேற்றியதாகவும் கௌரவிக்கப்பட்டன. இதுபோன்ற பல துணிச்சலான நாய்கள் நம் ஆயுதப் படைகளுடன் உள்ளன, அவைகள் நாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்துவருகின்றன.

சமீபத்தில், பீட் காவல்துறையினர் ராக்கி எனப் பெயரிடப்பட்ட நாயின் திறமைகள் குறித்து கண்ணீருடன் கூறினர்.

இந்தியாவில் பேரழிவு மேலாண்மை மற்றும் மீட்பு பணிகளில் நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டு நாய்களுக்கு என்டிஆர்எஃப் வீரர்கள் பலவித பயிற்சிகளை அளித்துள்ளனர். இந்த நாய்கள் பூகம்பம் அல்லது கட்டட சரிவில் குப்பைகளின் கீழ் உயிருடன் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதில் வல்லுநர்களாக செயல்படுகின்றன. இந்திய இன நாய்கள் மிகவும் நல்லவை, திறமையானவை.

முடோல் ஹவுண்ட் மற்றும் இமாச்சல ஹவுண்ட், ராஜபாளையம், கண்ணி, சிப்பிபராய் மற்றும் கோம்பாய் ஆகியவை நல்ல இந்திய இன நாய்கள். அவற்றின் பராமரிப்பு செலவும் மிகக் குறைவு, அவை இந்திய வானிலைக்கு பழக்கமாக உள்ளன. இப்போது பாதுகாப்புப் படையினரும் இந்திய இன நாய்களை தங்கள் நாய் குழுக்களில் சேர்த்து பயிற்சி அளித்துள்ளனர்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இந்திய இன நாய்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. அவர்களின் நோக்கம் இந்திய இனங்களை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதே.

அடுத்த முறை நீங்கள் ஒரு நாயை வளர்க்க நினைக்கும் போது, ​​ஒரு இந்திய இன நாய்க்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். தன்னம்பிக்கை கொண்ட தற்சார்பு இந்தியா சமானிய மக்களின் மந்திரமாக மாறும்போது, ​​எந்தத்துறையும் விடுபட்டுவிடக்கூடாது என்று அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.