ETV Bharat / bharat

ராஜிவ் காந்தி நினைவுநாள்: பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி - ராஜிவ் காந்தி நினைவு நாள்

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 29ஆவது நினைவுநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

rajiv
rajiv
author img

By

Published : May 21, 2020, 11:24 AM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டார். இளம் வயதிலேயே பிரதமரான ராஜிவ், அஸ்ஸாம்-பஞ்சாப் அமைதி ஒப்பந்தத்தில் 1985ஆம் ஆண்டும், மிசோரம் அமைதி ஒப்பந்தத்தில் 1986ஆம் ஆண்டும் கையெழுத்திட்டார்.

சுயசார்பு கொள்கை, அரபு நாடுகளுடன் நெருக்கம் போன்றவற்றால் அமெரிக்காவின் பகையை ராஜிவ் பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் ராஜிவ் நல்லுறவில் ஈடுபட்டு தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்ற சார்க் அமைப்பைத் தோற்றுவித்தார்.

இதனிடையே, ஸ்ரீபெரும்புதூரில் 1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவர் படுகொலைசெய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரின் 29ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், அஞ்சலி செலுத்தியதைக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.