சமூக வலைதளமான ட்விட்டரில் அனைத்து அரசியல் தலைவர்களும் கணக்கு வைத்துள்ளனர். பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ட்விட்டரில் கணக்கு தொடங்கினார்.
அன்றைய தினம் முதல் அதில் தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவர் கணக்கு தொடங்கும்போது அவரை 2 ஆயிரத்து 354 பேர் மட்டுமே பின்தொடர்ந்தனர். ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்தது.
மோடி பிரதமராக பதவியேற்ற பத்து மாதத்தில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஒரு கோடி அதிகமானது. இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகளிலேயே ட்விட்டரில் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பது மோடிதான்.
உலக அரசியல் தலைவர்களில், டொனால்ட் டிரம்ப், ஒபாமா ஆகியோருக்கு அடுத்தபடியாக ட்விட்டரில் அதிகமானோர் பின்தொடர்வது பிரதமர் மோடியைத் தான்.
ஏப்ரல் 2015இல் ட்விட்டரில் கணக்கு தொடங்கிய ராகுல் காந்தி, 1.5 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: குதிரை பேர ஆடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் அபிஷேக் மனு சிங்வி!