இந்தியப் பொருளாதாரம் சரிவை சந்திக்கும் வேளையில் இதனைச் சரிசெய்ய மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துவருகின்றது.
சிறு, குறு நிறுவனங்கள் உயர்வைச் சந்தித்தால் மட்டுமே இந்தியப் பொருளாதாரம் உயர்வைச் சந்திக்கும். இதனைக் கருத்தில்கொண்டு பாஜக அரசு எந்தத் துறைக்கும் வழங்காத சலுகைகளை சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறது.
அந்த வகையில் கரோனா நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் பெரும் அளவு தொகையை சிறு, குறு நிறுவனங்களுக்கு அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மேலும் இன்று ஒரேநாளில் சிறு, குறு நிறுவனங்களுக்கு 3,200 கோடி ரூபாய் கடனை பொதுத் துறை வங்கிகள் வழங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிறு, குறு நிறுவனங்கள் உரையாடவும், அவர்கள் தங்களது கருத்துகளைப் பரிமாறவும் பிரதமர் நரேந்திர மோடி 'சாம்பியன்ஸ்' என்ற வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ’டெடியுடன்’ பேருந்தில் பயணித்த இளம்பெண்!