மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூரும் விதமாக பல்வேறு மொழி பாடகர்களை வைத்து ராமோஜி குழுமம் சார்பில் பாடல் வெளியிடப்பட்டது. காந்திக்குப் பிடித்தமான 'வைஷ்ணவ ஜனதோ' என்ற அந்தப் பாடலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வெகுவாகுப் பாராட்டியிருந்தார்.
அந்தப் பாடலில், 'அடுத்தவரின் வலியை உணர்பவனே வைணவன். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் பெருமை அடையாதவன் அவன்' எனப் பொருள்படும்படி அமைந்திருக்கும் ஒரு வரி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது.
இந்நிலையில், காந்தியின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் ராமோஜி ராவ் அந்தப் பாடலை வெளியிட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு அவரைப் பாராட்டியுள்ளார். அந்தப் பாடலை நமது ஈடிவி பாரத் செய்திகள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத்தின் பாடலை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி!