ETV Bharat / bharat

கோவிட் - 19 மத்தியில் சேவையாற்றி வந்த இந்திய அஞ்சல் ஊழியர்களுக்கு பிரதமர் வாழ்த்து! - இந்தியாவை இணைக்கும் அஞ்சல் துறை

டெல்லி : கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் சேவையைத் தொடர்ந்துவரும் இந்திய அஞ்சல் ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவிட் - 19 மத்தியில் சேவையாற்றி வந்த இந்திய அஞ்சல் ஊழியர்களுக்கு பிரதமர் வாழ்த்து !

author img

By

Published : Oct 9, 2020, 6:00 PM IST

1874ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினத்தை நினைவுகூறும் வகையில், சர்வதேச அளவில் உலக அஞ்சல் தினம் இன்று (அக்.09) கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், உலகிலேயே அதிக தபால் நிலையங்களைக் கொண்ட நாடாகக் கருதப்படும் இந்தியாவில் உலக அஞ்சல் தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தியாவை இணைக்கும் அஞ்சல் துறையினரின் முயற்சிகள் குறித்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் கடும் உழைப்பு எண்ணற்ற மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உலக அஞ்சல் தினத்தில் இந்திய அஞ்சல்துறை ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறட்டும்" எனத் தெரிவித்தார்.

மத்தியத் தகவல் தொடர்பு, மின்னணு தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள குறிப்பில், "இந்த உலக அஞ்சல் தினத்தில், கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியிலும்கூட நாட்டின் குடிமக்களுக்கு நட்சத்திர சேவை வழங்கியதற்காக, உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பான இந்திய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணியில் கரோனா பாதிப்பால் தங்களது உயிர்களை இழந்த அந்த ஊழியர்களுக்கு எனது அஞ்சலி" எனக் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்களைக் கொண்ட இந்திய அஞ்சல் துறையில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.