உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த 30 நாள்களாக இந்தியாவில் தீவிரமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 23 ஆயிரத்து 97 பேர் பாதிக்கப்பட்டும், இரண்டாயிரத்து 858 பேர் குணமடைந்தும் 721 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
வைரஸ் பெருந்தொற்று தீவிரமடையும் முன் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள மத்திய அரசு அறிவித்திருந்த ஊரடங்கை மே 3ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டுவருகின்றன. நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் வழிநடத்தி வருகிறார்.
இந்தச் சூழலிலும் ஏப்ரல் 14ஆம் தேதி மக்களுக்கு ‘வயதானவர்களோடு பேசுங்கள் அவர்களின் தனிமையைப் போக்குங்கள்’என அறிவுறுத்தியது போல, தானும் தனது மூத்த சகாக்களின் உடல்நிலையைப் பற்றி கடும் பணி சூழலிலும் தொலைபேசி மூலமாக கேட்டறிந்து வருகிறார்.
தனக்கு உறுதுணையாக, உறவாக இருந்த மூத்த சகாக்களுக்கு நாடு தழுவிய முடக்கத்தாலும், பரவிவரும் கோவிட்-19 தொற்றுநோயாலும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்த பிரதமர் மோடி இவ்வாறு தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி டெல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஓ.பி. பப்பரை தொலைபேசியில் இன்று அழைத்து பேசியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ ஓ.பி. பப்பர், “முன்பின் அறியாத தொலைபேசி எண்ணில் இருந்து 2-3 நாள்களாக எனக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் அவற்றை என்னால் எடுத்து பேச முடியவில்லை. இன்று, மீண்டும் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்தால், மறுபுறம் பேசியவர் பிரதமர் மோடி என்னுடன் பேச விரும்புகிறார் என்று கூறினார். நான் வியந்தேன்.
காலை 8:30 மணியளவில் இந்த அழைப்பு வந்தது. சுமார் 2 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில் இன்று தனக்கு ஆரம்பத்தில் உறுதுணையாக இருந்தவர்களை, அரசியலைக் கற்பித்தவர்களை அழைத்து நலன் விசாரித்துவருவதாக கூறினார். எனது குடும்பத்தைப் பற்றியும் கேட்டறிந்தார். அவர் மிகவும் எளிமையாக பேசினார். என்றும் கடந்தக் காலத்தை மறக்காதவர் அவர். அவருடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த உரையாடலின்போது, நான் ஒரு சுயம் சேவாக். நான் சங்கத்திலிருந்து கற்றுக்கொண்ட அனைத்தையும் தற்போது மக்களுக்கு உதவ பயன்படுத்தி வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு பிரதமர், நானும் தேசத்தின் நலனைக் கவனிக்கும் ஒரு சுயம்சேவகர் என கூறினார். அவரிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
இதையும் படிங்க : மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோ
னா