ஆசியான் அமைப்பில், தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு இடையிலான 17-வது உச்சி மாநாடு நேற்று (நவ.12) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கரோனாவுக்கு எதிராக ஆசியான் அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்தியாவுக்கும், ஆசியான் அமைப்புக்கும் இடையே எல்லாவகையான தொடர்புகளையும் அதிகரிக்க இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி, ஆசிய நாடுகளுக்கு கரோனா நிவாரண நிதியாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (7.4 கோடி ரூபாய்) வழங்கவுள்ளதாக அறிவித்தார்.
இதையும் படிங்க:'பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தால் அனைத்துத் துறைகளும் பலனடையும்'