இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மிலாடி நபி திருநாளை இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "இந்த நாளில் நபிகள் நாயகத்தின் கருத்துக்களின்படி, சமுதாயத்தில் நல்லிணக்கமும் இரக்கத்தின் உணர்வும் மேலும் அதிகரிக்கட்டும் என்றும் எங்கும் அமைதி நிலவட்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: