ETV Bharat / bharat

சூழலுக்கு ஏற்றார்போல் ஐநாவில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் - மோடி

சமகால சூழலை உணர்ந்து ஐநாவில் மாற்றத்தை ஏற்படுத்தி சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி
author img

By

Published : Jul 17, 2020, 10:54 PM IST

ஐநாவின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற அவர், சூழலுக்கு ஏற்றார்போல் ஐநாவில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "சமகால சூழலை உணர்ந்து ஐநா மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.

பலதரப்பு உறவை மேற்கொள்வதன் மூலமே நம்மை நாமே நிலைநிறுத்திக் கொள்ள முடியும். சமகால சூழலுக்கு ஏற்ப பல தரப்பு உறவுகள் அமைய வேண்டும். மனித இனத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சீர்திருத்தப்பட்ட பல தரப்பு உறவுகளுடனான சீர்திருத்தப்பட்ட ஐநா முக்கியம். ஐநாவின் 75ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நாம், அதன் தாக்கத்தை அதிகப்படுத்த உலகளாவிய பலதரப்பு அமைப்பில் சீர்திருத்த மேற்கொள்ள உறுதி ஏற்போம். மனிதர்களை மையப்படுத்திய புதுவிதமான உலகமயமாக்கலை அடிப்படையாக கொண்டு ஐநாவின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.

இரண்டாம் உலக போர் ஏற்படுத்திய தாக்கத்தை குறைக்கும் நோக்கில்தான் ஐநா தோற்றுவிக்கப்பட்டது. அதேபோல், இன்று, கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை குறைக்கும் வகையில் ஐநாவில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். இந்த வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. முக்கியமான காலக்கட்டத்தில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலக நல்லிணக்கம், சமூக பொருளாதார நிலை ஆகியவற்றை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ள நாம், இயற்கை சமநிலையை போற்றி பாதுகாக்க வேண்டும். ஐநாவின் கொள்கையை நிறைவேற்ற இந்தியா முக்கிய பங்காற்றும். பூமியின் குழந்தையாகிய நாம், சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொண்டு நோக்கைத்தை அடைய வேண்டும்" என்றார்.

மோடி

ஐநாவின் மிக முக்கிய அமைப்புகளில் ஒன்றாக இருப்பது ஐநா பாதுகாப்பு கவுன்சில். உலக அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநாட்டுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த அமைப்பில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை நிராகரிக்கும் அளவுக்கு இந்த நாடுகளுக்குப் பிரத்யேகமான அதிகாரம் உண்டு. இதையடுத்து, ஜெர்மனி, பெல்ஜியம், போலாந்து உள்ளிட்ட 10 தற்காலிக உறுப்பு நாடுகள் உள்ளன. 2021-22ஆம் ஆண்டுகளுக்கான தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: எல்லை ஒப்பந்தத்தை சீனா இப்போது மீறக் காரணம் என்ன? - ராகுல் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.