காந்தி பிறந்து 150 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த ஆண்டு முழுவதும் அதனை விழாவாக கொண்டாடுகிறது. காந்தி 150 விழாவின் இரண்டாவது தேசிய குழுக் கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையேற்றார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயடு, போர்ச்சுக்கல் பிரதமர் ஆண்டணியோ காஸ்டோ, மத்திய அமைச்சர்கள், காந்தியவாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மத்திய கலாச்சர அமைச்சகத்தால் காந்தி பற்றிய தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட, குடியரசுத்தலைவர் அதை பெற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்வில் பேசிய மோடி,"உலகம் இன்று காந்தியை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.
காந்தியின் நோக்கங்களையும், சிந்தனைகளையும் உலகிற்கு எடுத்துக்காட்டுவது இந்தியர்களாகிய நமது கடமை. காந்தி 150 என்பது ஏதே ஒரு வருடம் மட்டும் காந்தியை நினைவு கூறுவதல்ல. ஒவ்வொரு குடிமகனும் காந்தியின் கொள்கைகள்படி தினந்தோறும் நடக்கவேண்டும்.
காந்தியின் அடிப்படை கொள்கையான கிராமிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நாம் செயல்பட்டால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்லும். சுதந்திர இந்தியாவின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடும் வரையில் காந்தியின் கிராமிய பொருளதார கொள்கைப்படி பின்பற்றி நடக்க வேண்டும்.
தேசத்துக்கும் சகமனிதர்களுக்கும் யார் ஒருவர் உண்மையாக கடமைகள் ஆற்றுகிறாரோ அவர் மற்றவருடைய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார் என்று காந்தி கூறுவார். அவ்வாறு கூறிய காந்தியின் வழியில் நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் கடமையாற்றினால் இந்தியாவின் கனவு நிறைவேறும்" என்றார்.
இதையும் படிங்க: மகாத்மா காந்தி நினைவிடத்தில் போர்ச்சுக்கல் பிரதமர்...!