ETV Bharat / bharat

நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி - பிரதமர் மோடி

டெல்லி: தற்சார்பு இந்தியா வீடுகள்தோறும் எதிரொலிக்க தொடங்கி விட்ட நிலையில், தயாரிக்கும் பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி
author img

By

Published : Dec 27, 2020, 4:26 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், "கரோனா காரணமாக உலகில் விநியோகச் சங்கிலி தொடர்பான பல இடையூறுகள் ஏற்பட்டன. ஆனால் நாம் அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் ஒரு புதிய கற்றலைப் பெற்றோம். நாட்டில் தற்சார்பு என்ற புதிய திறன் பிறப்பெடுத்தது.

நாம் தற்சார்பு பாரதத்தை ஆதரிக்கிறோம், ஆனால் நமது தயாரிப்பாளர்களும் ஒரு விஷயத்தை நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவர்கள் தங்கள் தயாரிப்புகளில் சற்றுக்கூட தரக்குறைவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பூஜ்யம் பாதிப்பு, பூஜ்யம் குறைபாடு என்ற எண்ணத்தோடு நாம் பயணிக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

நாட்டுமக்கள் உறுதியான முடிவெடுத்திருக்கிறார்கள், பலமான முன்னெடுப்பை மேற்கொண்டிருக்கிறார்கள். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பது வீடுகள்தோறும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. இந்த நிலையில், நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

எவை உலகளாவிய அளவில் சிறந்து இருக்கின்றனவோ, அவற்றை நாம் இந்தியாவிலே தயாரித்துக் காட்ட வேண்டும். இதன் பொருட்டு நமது தொழில்முனைவுடைய நண்பர்கள் முன்வர வேண்டும். இதுவே நான் நாட்டின் தயாரிப்பாளர்கள்-தொழில்துறைத் தலைவர்களிடம் விடுக்கும் வேண்டுகோள்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.