இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடிவரும் சூழலில், நாளை மக்கள் ஊரடங்கைப் பின்பற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவிலுள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.
அப்போது அவர், கோவிட்-19யை எதிர்க்கும் சவாலில் மருந்து உற்பத்தியாளர்களும், மருந்து விநியோக நிறுவனங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.
தேவையான மருந்துகள், உபகரணங்களை விநியோகிப்பது மட்டுமல்லாமல் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் மருந்துப் பொருள்களின் விநியோகத்தை சீராக வைத்திருக்க அரசு எல்லா வகையிலும் உதவும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு