ETV Bharat / bharat

ராஜதர்மம் குறித்து சோனியா பாடம் நடத்த வேண்டாம்: மத்திய அமைச்சர் காட்டம்!

டெல்லி: ராஜதர்மம் குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ராஜதர்மம் குறித்து சோனியா எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் -மத்திய அமைச்சர் காட்டம்!

author img

By

Published : Feb 29, 2020, 4:09 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறையில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் 26 வயதான அன்கித் சர்மா உள்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இது தொடர்பாக டெல்லியில் 123 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இதையடுத்து சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் டெல்லி கலவரம் குறித்து மனு அளித்தனர்.

அதில், “கலவரத்தை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ராஜ தர்மம் என்றால் என்ன என்பதை நினைவுபடுத்த வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “டெல்லியில் கலவரத்தை முதல் நாளே கட்டுக்குள் கொண்டு வர அமித் ஷா முயற்சித்து வந்தார்” எனக் கூறினார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மேலும், “ராஜதர்மம் குறித்து சோனியா எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். நீங்கள் கடந்து வந்த பாதை பல நெளிவு சுளிவுகளை கொண்டது என்பதை மறந்துவிட வேண்டாம். காங்கிரஸ் ஆட்சியில் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...மருத்துவர் நியமனத்தில் முறைகேடு: பேரவை துணைத் தலைவரே புகாரளித்ததால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.