ETV Bharat / bharat

ஹோலி விடுமுறைக்குப் பின்னர் சிஏஏ வழக்குகள் குறித்து கபில் சிபல் முறையிடலாம் - உச்ச நீதிமன்றம் - சிஏஏ வழக்குகள்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை ஹோலி விடுமுறைக்குப் பின்னர் கபில் சிபல் முறையிடலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SC
SC
author img

By

Published : Mar 5, 2020, 11:51 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விரைந்து விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். மேலும், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனவும், சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, சபரிமலை குறித்த வாதங்கள் முடிவடைந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தது. ஹோலி விடுமுறைக்குப் பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து கபில் சிபல் முறையிடலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களுக்கு இன்னும் சில நாள்களில் மத்திய அரசு பதிலளிக்கும் என அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இருந்தபோதிலும், சட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு சபரிமலை, மசூதி உள்ளிட்ட இடங்களுக்குள் பெண்கள் நுழைவது குறித்த வழக்குகளை ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜவாத் அக்தருக்கு எதிராக புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.