டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் செய்தியாளர்களை வேலையை விட்டு அனுப்புவது, அவர்களின் ஊதியத்தைக் குறைப்பதுமான நடவடிக்கைகளில் ஊடக நிறுவனங்கள் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கினால் ஊடகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன. இதனால் ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு, கால வரையற்ற விடுமுறை என்ற பல்வேறு நடவடிக்கைகளின் கீழ், ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம், டெல்லி பத்திரிகையாளர் சங்கம், பிர்ஹான் மும்பை பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
கரோனாவால் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்!
அம்மனுவில், 'கரோனா நோய்க் கிருமித் தொற்றின் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுவதால், முன்பு எப்போதும் இல்லாத வகையில், அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. அச்சு ஊடகங்கள் விளம்பரங்களின் மூலமே வருவாய் ஈட்டி வருகின்றன.
ஆனால், ஊரடங்கு காரணமாக அரசு விளம்பரங்கள் 80-85 விழுக்காடும், இதர விளம்பரங்கள் 90 விழுக்காடும் குறைந்து விட்டன. ஆனால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கு ரூ.1,500 கோடி முதல் ரூ. 1,800 கோடி வரை விளம்பர நிலுவைத் தொகையை இன்னும் வழங்காமல் உள்ளன.
கோவிட்-19: ஆப்பிள்- கூகுள் நோயாளிகளை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை வெளியிட்டது!
இதில், அச்சு ஊடகங்களுக்கு மட்டும் 800 கோடி முதல் 900 கோடி வரை, நிலுவை வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக வழங்கப்படாத இந்த நிலுவைத் தொகை விரைவில் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
விளம்பரங்கள் இல்லாததால், பெரும்பாலான நாளிதழ்கள் பக்கங்களைக் குறைத்து வெளியிடுகின்றன. விளம்பர வருவாய் இன்றி அச்சு ஊடகங்கள் நலிவடைந்துள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.