தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அந்த நான்கு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்த சம்பவ பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த நான்கு பேரும், காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனர். இதையடுத்து காவலர்கள் தற்பாதுகாப்புக்காக சுட்டதில் அந்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.
இந்த என்கவுன்டர் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து பெண் சமூக செயற்பாட்டாளர் சஞ்சனா கூறும்போது, “இது சட்டத்திற்கு புறம்பாக நடந்துள்ளது. இது என்கவுன்டர் அல்ல, திட்டமிட்ட கொலை” என்றார்.
இதையும் படிங்க: ஒடுக்கப்பட்ட மக்கள் மீதுதான் என்கவுன்டர் நடக்கிறது -கனிமொழி கண்டனம்