பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிரோஷ், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து பிரசாந்த் கிஷோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர் (பி.கே.), “நிதிஷ் குமாருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. நான் அவரை மதிக்கிறேன். அவர் முடிவை ஏற்றுகொள்கிறேன்.
ஆனால் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஏழை மாநிலமாக பிகார் இருந்துவருகிறது. அதன் வளர்ச்சி ஆமை வேகத்தில் நடக்கிறது. எனினும் நிதிஷ் குமாரின் நிர்வாக ஆட்சியை கேள்வி கேட்க யாருமில்லை.
ஆகவே இந்தியாவின் சிறந்த பத்து மாநிலங்களுள் ஒன்றாக பிகாரை மாற்றும்பொருட்டு, பாத் கி பிகார் (பிகாரின் குரல்) என்ற திட்டத்தை வரும் 20ஆம் தேதி தொடங்குகிறேன்.
மகாத்மா காந்தியின் விழுமியங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று நிதிஷ் குமார் சொல்வார். ஆனால் அவர் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்.
என்னைப் பொறுத்தமட்டில் காந்தியையும், கோட்சேவையும் ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கமுடியாது. இரண்டு விஷயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இது கடந்த மக்களவைத் தேர்தலின் போதே தொடங்கியது. நீங்கள் யாரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என எங்களுக்குச் சொல்ல வேண்டும்" என்றார்.
பிகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பி.கே.வின் இந்த திட்டம் நிதிஷ் குமாரின் அரசுக்கு எதிராக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 650 இந்தியர்களை மீட்ட 'ஆபரேஷன் வூஹான்' - விவரிக்கும் மருத்துவர் புலின் குப்தா