ETV Bharat / bharat

எடிட் செய்த வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களிடம் சிக்கிய மத்திய அமைச்சர்! - பியூஷ் கோயல்

டெல்லி: 'வந்தே பாரத் விரைவு ரயில்' மின்னல் வேகத்தில் கடந்து செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டு, சமூக வலைதள வாசிகளிடம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வசமாக சிக்கியுள்ளார்.

piyush goyal
author img

By

Published : Feb 11, 2019, 12:06 PM IST

மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் ‘வந்தே பாரத்’ என்கிற அதிவேக விரைவு ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15-ம் தேதி முதல் இந்த ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில், ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் மின்னல் வேகத்தில் கடந்து செல்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு, “மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் வந்தே பாரத்” என குறிப்பிட்டிருந்தார்.

இதைப்பார்த்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள், சாதாரண வீடியோவை காட்டிலும், இரண்டு முறை வேகப்படுத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டு மக்களை முட்டாள்களாக்க மத்திய அமைச்சர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

அதோடு மட்டுமின்றி, பியூஷ் கோயல் வெளியிட்ட வீடியோவின் சாதாரண வெர்ஷனையும் பின்னூட்டத்தில் வெளியிட்டு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Intro:Body:

https://www.altnews.in/its-not-a-bird-its-not-a-plane-its-a-dodgy-video-posted-by-piyush-goyal/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.