மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு முன்பு பிரச்னை எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். எதிர்க்கட்சியினர் மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டுவருகிறது. எனவேதான் அரசால் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை" எனக் கூறியிருந்தார்.
இது குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், "மன்மோகன் சிங் முதலில் தன் தோல்விகளை ஒத்துக்கொள்ள வேண்டும். எங்கு தவறு நடந்தது, எதனால் வலிமையான பொருளாதாரத்தை உருவாக்க முடியவில்லை என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். சோனியா, ராகுல் ஆகியோரின் உத்தரவுக்காக அவர் காத்துக்கொண்டிருந்தார். சொந்த முடிவுகளை எடுக்கத் திறனற்றவராக அவர் இருந்தார்" என்றார்.