சுற்றுலா நகரமான புதுச்சேரியில் பல அழகிய இடங்கள் அமைப்பதோடு, பாரம்பரியம் பேசும் பழங்கால நினைவுச் சின்னங்களும் அதிகளவில் உள்ளன. பிரெஞ்சு காலத்தில் பிரிட்டிஷ் படையுடன் பிரான்ஸ் அரசு பல காலங்களில் மோதலில் ஈடுபட்டது. இதன் மூலம் பல இடங்களை கைப்பற்றியது. அதுபோல, செஞ்சி நகரத்தைக் கைப்பற்றியபோது அங்கிருந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் புதுச்சேரி கொண்டு வரப்பட்டன. அவற்றில், அழகை உருவங்கள் பொறித்த கல்லால் ஆன நினைவுத் தூண்களும் கொண்டுவரப்பட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே இன்று அலங்கரிக்கப்பட்டன. இந்தத் தூண்களில் ஒவ்வொன்றிலும் பல சிற்பங்கள் நிறைந்துள்ளன.
காந்தி சிலை உள்ள காந்தி திடலுக்கு கூடுதல் அழகு சேர்ப்பதாக இந்த நினைவுத் தூண்கள் விளங்குகின்றன. இந்நிலையில், இங்குள்ள தூண்களில் ஒரு தூணின் தலைப்பகுதி சேதமடைந்தது. இதனை சரிசெய்யும் பணிகளில் பொதுப்பணித் துறையின் சிறப்பு கட்டிட பிரிவு இறங்கியுள்ளது. இதற்காக, சேதமடைந்த தூணை சுற்றி தடுப்பு அமைத்து பணிகளை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளனர்.
இந்த தூண்கள் மிகவும் பழங்காலத்து சிற்பக் கலையை விளங்குகிறது. தொடர்ந்து வீசும் கடலின் உப்புக் காற்று உள்ளிட்ட காரணங்களால் தூணின் தலைப்பகுதி விரிசல் அடைந்துள்ளது. இதை கண்டறிந்து சரி செய்யும் பணியில் பழங்கால நினைவுச் சின்னம் என்பதால் பழமை மாறாமல் பாதிப்பை சரிசெய்ய மற்றும் தூண்களில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிந்து அதை சரி செய்யத் தொடங்கியுள்ளனர்.