கரோனாவால் மூடப்பட்டுள்ள அனைத்து மதம் சார்ந்த கோயில்களும் திறக்க அனுமதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "கரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்படியும், நெறிமுறைகளைப் பின்பற்றியும் பக்தர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லலாம் என்ற அனுமதியை வழங்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.