டெல்லி: பெட்ரோல், டீசல் விலை 60 காசுகள் உயர்ந்து விற்பனையானது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 71.26 ரூபாயிலிருந்து (ஜூன் 6) ரூ.71.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 69.39 ரூபாயிலிருந்து ரூ.69.99 ஆகவும் உயர்த்தப்பட்டதாக மாநில எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் விலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல், லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 ஆகவும், டீசல், லிட்டருக்கு 52 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று (ஜூன் 7) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
கரோனா தாக்கத்தினால் 82 நாள்கள் பெட்ரோல் - டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அதே நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.