ETV Bharat / bharat

இட ஒதுக்கீடு கோரிக்கை: நாராயணசாமியை சந்தித்த பழங்குடி அமைப்பினர்! - reservation

புதுச்சேரி: பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து பழங்குடியின மக்கள் கூட்டமைப்புத் தலைவர் ராம்குமார், புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமியை சந்தித்துள்ளார்.

Ram
author img

By

Published : Jun 5, 2019, 11:49 AM IST

பழங்குடியின மக்கள் கூட்டமைப்புத் தலைவர் ராம்குமார் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் புதுச்சேரி அட்டவணையில் பழங்குடியினர் பட்டியல் திருத்த சட்டம் கொண்டுவர வேண்டியுள்ளதாகவும், அந்த சட்டம் கொண்டுவரும் வகையில் காட்டுநாயக்கன், மலைக்குறவர் எருகுலா, குருமன், இருளர் ஆகிய ஐந்து பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஏற்கனவே உள்ள ஒரு சதவீத இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ஆணைக்கு பிறகு கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம்தான் நன்மை கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி, இருளர் அட்டவணை பழங்குடியினருக்கு அரை சதவீதமும், மற்ற நான்கு பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு 4 சதவீதம் என ஆணை பிறப்பித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதை போக்கும் வகையில், புதுச்சேரி அட்டவணை பழங்குடியினருக்கான அளவை மத்திய அரசு நிர்ணயிக்கும் வரை புதுச்சேரி ஆணையை நிறுத்தி வைத்து ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ராம்குமார் தலைமையில் முதலமைச்சரை சந்தித்து பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பழங்குடியின மக்கள் கூட்டமைப்புத் தலைவர் ராம்குமார் பேட்டி

Intro:பழங்குடியினர் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் முதல்வரிடம் பழங்குடியினர் கோரிக்கை மனு அளித்தனர்

Body:புதுச்சேரி பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் தலைமையில் பழங்குடியினர் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

அதில் புதுச்சேரி அட்டவணை பழங்குடியினர் பட்டியல் திருத்த சட்டம் கொண்டுவர வேண்டி உள்ளது அது சட்டம் கொண்டுவரும் வகையில் காட்டுநாயக்கன், மலைக்குறவர் எருகுலா, குருமன் ,இருளர் ஆகிய ஐந்து பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கான ஏற்கனவே உள்ள ஒரு சதவீத இட ஒதுக்கீடு கல்வி வேலைவாய்ப்பு சமூக நலத் திட்டங்களை தொடர வேண்டும் என்றும்

கடந்த 2010ஆம் ஆண்டு ஆணைக்கு பிறகு தான் கல்வி வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம்தான் நன்மை கிடைத்தது இதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி புதுச்சேரி அரசு ஒரு ஆணை பிறப்பித்துள்ளது இதில் இருளர் அட்டவணை பழங்குடியினருக்கு அரை சதவீதமும் மற்ற நான்கு பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு 4 சதவீதம் என ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவே புதுச்சேரி அட்டவணை பழங்குடியினருக்கான அளவை மத்திய அரசு நிர்ணயிக்கும் வரை புதுச்சேரி ஆணையை நிறுத்தி வைத்து ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து இந்த மனுவை அளித்தனர்

ராம்குமார் பேட்டி பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு

Conclusion:பழங்குடியினர் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் முதல்வரிடம் பழங்குடியினர் கோரிக்கை மனு அளித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.