மனிதர்கள், விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட 27 பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்வதாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறை கடந்த மே 14ஆம் தேதி வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த முடிவுக்குக் கருத்து தெரிவிக்க 45 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திராம், கேப்பன், டெல்டாமெத்ரின் கார்பென்திஸிம், மலாதியோன், குளோரோஃபைரிபோஸ் உள்ளிட்ட 27 பூச்சிக்கொல்லிகள் இதில் அடக்கம். இதுதவிர, டிடிவிபி அல்லது டைகுளோர்வோஸ் என்று அழைக்கப்படும் வேதிப்பொருளும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியோடு தடை செய்யப்படுகிறது.
இதில் பெரும்பான்மையானவை மிகுந்த நச்சுத்தன்மை கொண்டதாலும், இதற்கு மாற்றாக உயிரி பூச்சிக்கொல்லிகள் இருப்பதாலும் நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியப் பொருளாதாரம், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே அரசு இவ்வாறு செய்துள்ளது. இந்த ஆணையை தேனீ வளர்ப்பாளர்கள், இயற்கை விவசாயிகள், நறுமணப் பொருள் தயாரிப்புத் துறையினர் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், இதனை நாம் விதை உற்பத்தித் துறையினரின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். தடைசெய்யப்படும் பூச்சிக்கொல்லிகளை, விவசாயிகள் பயிர்கள் மீது பயன்படுத்தி வரும் வேளையில், மறுபக்கம் விதை உற்பத்தி நிறுவனங்கள் விதைகளை நேர்த்தி செய்ய இவற்றைப் பயன்படுத்தி வருகின்றன.
சோளம், கம்பு, சூரியகாந்தி, கடுகு, காய்கறிகளின் விதைகளைப் பாதுகாக்க டெல்டாமெத்ரின் பயன்படுகிறது. மற்ற பூச்சிக்கொல்லிகளுடன் ஒப்பிடுகையில் மலிவாகக் கிடைக்கும் இதனைப் பல்லாண்டுகளாக விதை உற்பத்தித் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
திராமை எடுத்துக்கொண்டால் அது புஞ்சைக்கொல்லியாகப் பயன்படுகிறது. நெல், பருப்பு விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களளுக்கு திராம் மிகவும் முக்கியமானது. அதிக விலையில் கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளை இந்த நிறுவனங்கள் வாங்க முடியாது. அப்படிச் செய்தால் அவர்களுக்கு லாபமே கிடைக்காது. தடைசெய்யப்படும் பூச்சிக்கொல்லிகள் அந்நிறுவனங்களின் செலவைக் கணிசமாகக் குறைக்கவல்லது.
ஆகையால் இவற்றைக் கருத்தில்கொண்டு மாற்று வேதிப்பொருள்கள், பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றைச் சோதனை செய்ய வேண்டும். அதனால் பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்வதற்கு முன்பு, இதுகுறித்து அரசு படிப்பாயாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அடுத்ததாக, இந்த புது வேதிப்பொருடள்கள் கைக்கு அடக்கமான விலையில் கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். விலை கூடுதலாக இருந்தால், விதையின் உற்பத்தி விலை அதிகரித்து, விவசாயிகளிடம் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் உள்ளது.
ஒருவேளை இதுபோன்ற தடை செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக வேறெந்த பூச்சிக்கொல்லியும், வேதிப்பொருளும் ஏற்படுத்தித் தரப்படவில்லை என்றால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தலாம். இதனால் விவசாயத் துறையே பெரிதும் பாதிப்படையலாம்.
மேலும், இந்தத் தடையை மூன்று, நான்கு நாள்கள் படிப்படியாகச் செயல்படுத்த வேண்டும். விதை உற்பத்தி நிறுவனங்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராவதற்கும், ஏற்கனவே வாங்கிவைத்த பூச்சிக்கொல்லிகளை முழுவதுமாகத் தீர்க்கவும் இது உதவும். மேலும், இப்பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு, விதைகள் செயலற்றுப் போகும் வரை சந்தையில் விற்க அனுமதியளிக்க வேண்டும்.
உயிரி மற்றும் நானோ தொழில்நுட்பங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்யும் முறைகளைச் செயல்படுத்துவது குறித்து அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்றவற்றை வடிவமைக்க ICAR, IARI போன்ற ஆய்வு நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும். இயற்கையாகத் தோன்றும் பல பாக்டீரியாக்கள், பூஞ்சைகளைப் பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுத்தலாம். அவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காது. இவை அனைத்தும் அரசு அமைப்புகள் மூலம், காப்புரிமை இல்லாமல் வடிவமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மீண்டும் பரிசோதனையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்!