ETV Bharat / bharat

கரோனா தொற்றால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பரவுமா? - நாம் அறிந்துகொள்ள வேண்டியவை... - கரோனா மரணங்கள்

கரோனா தொற்றால் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் வேளையில், அதுபற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது இத்தொகுப்பு...

People stopping cremation and burial of covid19 dead victims

author img

By

Published : Apr 30, 2020, 1:15 PM IST

கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், கரோனாவால் இறந்தவர்கள் பற்றி பரப்பப்படும் வதந்தியுமே ஆகும்.

கட்டுக்கதை: கரோனா தொற்றால் இறந்தவர்கள் உடலில் இருந்து வைரஸ் பரவும்...

கரோனா தொற்றால் இறந்தவர் உடலின் பாதுகாப்பு மேலாண்மை பற்றி உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கை தெளிவாகவும் எளிதாகவும் இதுபற்றி விளக்குகிறது.

இறந்த உடல்களின் மூலம் நோய் பரவாது. அதனால் தும்மவோ, இருமவோ, சுவாசிக்கவோ முடியாது. ஒருவர் இறக்கும்போது நோய் பரவல் மற்றும் வைரசின் தாக்கம் நின்றுவிடும்.

தோலில் வைரஸ் துகள்கள் இருக்கும், அதனால் உடல் முழுவதையும் துணியைக் கொண்டு மூடினால் போதும்.

பிணத்தை அடக்கம் அல்லது தகனத்துக்கு தயார்படுத்தும் சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்க வேண்டும்.

இறந்தவர் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வது, இந்த இரண்டு முறையில் எதுவானாலும் பாதுகாப்பானதுதான். மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் வைரஸ் பரவாது. அதேபோல் 4,000 டிகிரி செண்டிகிரேட்டில் தகனம் செய்யப்படும் உடலில் வைரசால் தாக்குப்பிடிக்க முடியாது. உடல் எரிக்கப்படும்போது வரும் புகையினாலும் வைரஸ் பரவ வாய்ப்பில்லை. இந்தத் தகவலை முறையாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தாலே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும்.

அடக்கம் அல்லது தகனம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவப் பட்டியல்

23.4.20 - கோவிட் 19 தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய அக்கம்பக்கத்தினர் மறுப்பு தெரிவித்ததால், கர்நாடக மாநிலம் தக்‌ஷினா மாவட்ட சுகாதாரப் பணியாளர்கள் உடலை அடக்கம் செய்ய இடம் தேடி 40 கிமீ அலைந்தனர்.

பன்ட்வால் தாலுகா கஸ்பாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மங்களூரு வென்லாக் மருத்துவனையில் கரோனாவால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நான்கு நாட்களில் அவரது மருமகள் இதே தொற்றால் மரணமடைந்தார். இந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. அந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏவே மக்களோடு சேர்ந்து இறுதி காரியங்களை நடத்த மறுப்பு தெரிவித்தார்.

19.4.20 - கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர் நரம்பியல் நிபுணர் டாக்டர். சைமன் ஹெர்குலிஸ், அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய அரசு உத்தரவிட்டது. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவர் உடலை எடுத்துவந்த ஆம்புலன்ஸை திரும்பிச் செல்லும்படி செய்தனர். பின்னர் அவரது உடல் அண்ணா நகரிலுள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் இங்கிருந்த மக்கள், கீழ்ப்பாக்கத்து மக்களை விட ஒருபடி மேலே போய் உடலை அடக்கம் செய்ய மறுத்ததோடு, கற்கள் கட்டைகளால் வண்டியில் அடித்தனர். ஆம்புலன்ஸ் கண்ணாடிகளை உடைத்து சுகாதாரப் பணியாளர்களை தாக்கினர். அதன்பிறகு இரவு நேரம் போலீஸ் பாதுகாப்புடன் சைமனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

29.3.20 - குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கரோனாவால் உயிரிழந்த ஒருவரது உடலை புதைக்க அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இப்படி இந்தியா முழுக்க தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. மக்களிடம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தாதே இதற்கெல்லாம் காரணமாகும். எனவே இதுதொடர்பாக அரசாங்கம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.