புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தின் பல்வேறு இடங்களில் இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், நேற்று (ஜூலை 17) வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், அய்யனார் நகர் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்று அப்பகுதி மக்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
டோர்னடோ (Tornado) என அழைக்கப்படும் சுழல் காற்று நீரை உறிஞ்சி செல்லும். நேற்று திடீரென இறால் பண்ணையில் டோர்னடோ ஏற்பட்டது மக்களிடையை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்கள் செல்போன் மூலம் பதிவு செய்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இப்படி ஒரு அரிய காட்சி அவ்வப்போது ஏனாம் பகுதியில் ஏற்பட்டு வருவதாகவும் இரண்டு மாதங்களுக்கு முன்பு வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் இதுபோன்ற சூறாவளி ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
திடீரென ஏற்பட்ட டோர்னடோவால் அப்பகுதியில் சில குடிசைகளும், இறால் பண்ணைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று - 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்