ETV Bharat / bharat

நிவாரண நிதி பெற மலையேறிய மக்கள்

author img

By

Published : Apr 21, 2020, 11:36 AM IST

Updated : Apr 21, 2020, 12:23 PM IST

விசாகப்பட்டினம்: மோமங்கி கிராமத்தில் கரோனா நிதியைப் பெறுவதற்கு வயதான முதியவர்கள், பெண்கள் எனப் பலரும் மலையேறி அவதிப்பட்டனர்.

GOVERNMENT
GOVERNMENT

கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. தொழில் துறையும் முற்றிலும் முடங்கியுள்ளது.

அன்றாடம் கூலிக்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் முதல் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை ஊரடங்கால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் கூலி வேலைசெய்பவர்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் ஒவ்வொரு நாளையும் கடத்துவது அவர்களுக்குப் மிகப்பெரிய போராட்டமாக உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த மாநில அரசாங்கங்கள் நிதியுதவி அளித்துவருகின்றன. ஆந்திரா மாநிலம் கோமங்கி கிராமத்தில் உள்ள மக்களுக்கு, கரோனா நிவாரண நிதியை வழங்குவதற்காக அரசாங்க அலுவலர்கள் அப்பகுதிக்குச் சென்றனர்.

நிவாரணம் பெற மலையேறிய மக்கள்

அப்போது பணம் பெறும் மக்களின் புகைப்படத்தை பயோமெட்ரிக் மூலம் பதிவுசெய்ய அரசு அலுவலர்கள் பணியைத் தொடங்கியபோது, அப்பகுதியில் செல்போன் சிக்னல் குறைவாக இருந்துள்ளது. இதனையடுத்து சிக்னல் கிடைக்க வேண்டும் என்று மலைப்பகுதிக்கு அம்மக்களை அரசு அலுவலர்கள் அழைத்துச் சென்றனர்.

நிவாரண உதவியைப் பெறுவதற்காக வயதான முதியவர்கள் முதல் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் எனப் பலரும் கடும் வெயிலில் மலையேறிச் சென்று அவதிப்பட்டனர். கரோனா நிதியை வழங்குவதில் அரசாங்கம் தங்களை அலைக்கழிப்பதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க:கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற மலைகிராம மக்கள்!

Last Updated : Apr 21, 2020, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.