மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னியில் ஆன்மீகத் தலைவரான தேவ் பிரபாகர் சாஸ்திரி கல்லீரல், சிறுநீரக நோய் காரணமாக நேற்று முன்தினம் (மே 18) உயிரிழந்தார். மேலும் அனைவராலும் ‘தாதா ஜி’ என்று அழைக்கப்படும் இவரின் இறுதி ஊர்வலம் நேற்று (மே 19) நடந்தது, இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கரோனா தொற்றின் காரணமாக ஒருவரது இறுதிசடங்கு, இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது. மேலும் கலந்துகொள்ளும் அனைவரும் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது.
இந்நிலையில் இவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் தகுந்த இடைவெளி, ஊரடங்கு உத்தரவின் சட்டங்கள் எதுவும் கடைபிடிக்கவில்லை. எல்லா விதிமுறைகளும் மீறப்பட்டன.
இவரது இறப்புக்கு அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் மோசடி : உ.பி. அரசு