2012 நிர்பயா பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் சிங் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா, மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அதிகாலை 5:30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
இதனை ஹைதராபாத்தில் மக்கள் தீபாவளியாக கொண்டாடினர். இது குறித்து கோயில் பூசாரி ரங்கராஜன் கூறுகையில், “ஒரு நரகாசுரனின் மரணம் தீபாவளி என்றால், இது நான்கு மடங்கு தீபாவளி, ஏனெனில் நான்கு பேய்கள் கொல்லப்பட்டுள்ளன. இந்த வன்புணர்வாளர்கள் சட்டத்தையையும், நீதித்துறை முறையையும் தவறாகப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்தனர்.
சீதா மாதாவைக் காப்பாற்ற ராவணனுக்கு எதிராக ஒரு வீரம் மிக்க போராட்டத்தை நடத்தும் ராமாயணத்தில் ஒவ்வொரு குடிமகனும் ஜடாயுவின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகம் நமக்குத் தேவை.
பெண்களின் பாதுகாப்பிற்காக எங்களிடம் பல சட்டங்கள் உள்ளன. ஆனால் அவர்களால் மட்டுமே பெண்களை மீட்க முடியாது வக்கிரங்களிலிருந்து காப்பாற்ற முடியாது. இளைஞர்கள் ரட்சகர்களாக இருக்க வேண்டும். மாறாக சாத்தான்களாகக் இருக்கக் கூடாது” என்றார்.
எனினும் சட்டத்தால் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் கூறினார். முன்னதாக கோயிலில் நால்வரின் கொடும்பாவியும் அரக்கன் போல் பாவித்து தீயிட்டு கொளுத்தப்பட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி தெலங்கானாவின் ஷம்ஷதாபாத் நகரில் கால்நடை பெண்மருத்துவர் ஒருவர் நால்வரால் வன்புணர்வு செய்து கொன்றனர். மேலும் அவரின் உடலை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்தனர்.
அந்த நால்வரையும் காவலர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு