ETV Bharat / bharat

ஊரடங்கு விதிகளை பின்பற்றாத 28,000 பேர் மேற்கு வங்கத்தில் கைது - ஊரடங்கு விதிகளை பின்பற்றாத இருபத்து எட்டாயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் விதிகளை பின்பற்றாமல் அலட்சிய போக்குடன் நடந்த 28,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

people booked in West Bengal  for violating lockdown norms

author img

By

Published : Apr 22, 2020, 11:47 AM IST

நாடெங்கும் கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி நடந்துகொள்பவர்கள் மீது வழக்கு பதியும் நிலையும் இருந்துவருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஊரடங்கு விதியை மீறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 28,000 பேர் மீது பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் ராஜிவா சின்ஹா தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதியிலிருந்து பதியப்பட்ட வழக்குகளில் இந்த எண்ணிக்கை உள்ளதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு தடைகளை பின்பற்றாமல் இருந்ததற்காக சுமார் 3,000 வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 839 பேரை ஊரடங்கு உத்தரவை மீறி முகக் கவசம் இல்லாமல் வெளியே வந்ததற்காகவும், பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காகவும் கொல்கத்தா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தடையை மீறி வெளியே வந்ததற்காக 616 பேரும், முகக்கவசம் இல்லாமல் வந்ததற்காக 198 பேரும், பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக 25 பேரும் பிடிபட்டுள்ளனர்.

ஊரடங்கில் சோதனை செய்யும்போதும், ரோந்து பணியில் ஈடுபடும்போதும் இந்த கைது நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாக மூத்த காவல் துறை அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க... மத்திய குழுவுக்கு மேற்கு வங்க அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.