ETV Bharat / bharat

‘அதிகாரத்தில் இருப்பவர்கள் ஜனநாயகத்தைத் துண்டாடுகிறார்கள்’ - சிதம்பரம் - அதிகாரத்தில் உள்ளவர்கள் தூண்டாடுகிறார்கள்

டெல்லி: ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை தூண்டாடுவதாக சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

PC
PC
author img

By

Published : Jan 24, 2020, 11:49 AM IST

ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என்று ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்தது. தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் கட்சிகளின் பங்கேற்பு, அரசியல் கலாசாரம், மனித உரிமைகள் ஆகியவையின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதுகுறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். கனிமொழியைத் தொடர்ந்து சிதம்பரம் தன் கருத்தை வெளியிட்டுள்ளார். "ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்திய 10 இடங்கள் கீழே சென்றுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை உற்று கவனித்தால் ஜனநாயகம் சீரழிந்துள்ளதும் ஜனநாயக நிறுவனங்கள் வலுவிழந்துள்ளதும் தெரியவரும். அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை துண்டாடுகின்றனர்.

  • Anyone who has closely observed the events of the last two years knows that democracy has been eroded and democratic institutions have been debilitated those who are in power are the real ‘tukde tukde’ gang.

    — P. Chidambaram (@PChidambaram_IN) January 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தியா செல்லும் பாதையைக் கண்டு எச்சரிக்கை மணி விடுக்கப்பட்டுள்ளது. இதனாால், குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், "அரசியலமைப்பு சட்டம் 370, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கொண்டு நரேந்திர மோடி அரசு அச்ச உணர்வு பரப்புகிறது. இதனால், நாட்டின் வளர்ச்சி பாதிப்படைகிறது" என விமர்சித்துள்ளது.

இதையும் படிங்க: தடையாக இருக்கும் சட்டமேலவை - அதிரடி காட்டும் ஜெகன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.