நிர்பயா வழக்கு குற்றவாளிகளான அக்சய் சிங், முகேஷ் குமார், வினய் குமார் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.
முன்னதாக, இவரின் குறைதீர்வு மனுவை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி பவன் குறைதீர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நான்கு குற்றவாளிகளும் மார்ச் 3ஆம் தேதி தூக்கிடப்படுவார்கள் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முகேஷ், வினய் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: பவன் குமாரின் மறுசீராய்வு மனு தள்ளுபடி