டெல்லி மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளி ஒருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த நபரின் உடல்நிலை தற்போது தேறிவருவதாக மேக்ஸ் மருத்துவமனை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இதுபற்றி அம்மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், "அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரது உடல்நிலை நன்றாகத் தேறிவருகிறது. அவருடைய தாய் ஏற்கனவே சிகிச்சை முடிந்த வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.
இந்த உயிர் காக்கும் சிகிச்சைமுறைக்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், மனிதாபிமானத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நோயாளியின் உறவினர்கள் ஒப்புக்கொண்டால் மருத்துவமனைகள் அதனை மேற்கொள்ளலாம்" என்றார்.
பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளுமாறு இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கழகம், இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனிடையே, கரோனா பரவலுக்குக் காரணியாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட டிஃபென்ஸ் காலனி காவலரைப் பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு நோய்ப் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
"வரும் நாள்களில் அந்த காவலருக்கு கரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் தானாக முன்வந்து பரிசோதித்துக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அந்த நோயாளி தங்கியிருந்த டிஃபென்ஸ் காலனியில் உள்ள பல வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வெளியாள்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அக்காலனியின் தலைவர் மேஜர் ரன்ஜித் சிங் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பொருளாதாரப் பிரச்னைகளை சரி செய்ய குழு அமைக்க வேண்டும்: உ.பி., முதலமைச்சருக்கு பிரியங்கா கடிதம்!