புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் காரைக்காலிலிருந்து சென்னை, புதுச்சேரிக்கு நேரடியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம், கடலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் பயணிகள் காரைக்காலில் இறக்கப்படாமல் தரங்கம்பாடி தாலுக்கா நண்டலாறு சோதனைச்சாவடியிலும், நாகூரில் உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியிலும் இறக்கிவிடப்படுகின்றனர்.
இதனால் பயணிகள் சோதனைச் சாவடிகளில் இருந்து காரைக்காலுக்கு நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காரைக்காலுக்கு வரும் பேருந்துகளில், பயணிகள் காரைக்காலில் இறங்க அந்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் அனுமதி அளித்தும் இயங்காத தனியார் பேருந்துகள்