ETV Bharat / bharat

தீயாக வேலை செய்யும் பாஜக - நாடாளுமன்றம் 10 நாட்கள் நீட்டிப்பு?

டெல்லி: நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் 10 நாட்கள் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி
author img

By

Published : Jul 24, 2019, 11:59 AM IST

நாடாளுமன்றத்தில் தற்போது 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த மக்களவைக் கூட்டத்தொடர் தான் திட்டமிடப்பட்ட நேரத்தை விட 128 விழுக்காடு அதிகமாகச் செயல்பட்டு வருவதாக பிஆர்எஸ் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அமித் ஷா, நாடாளுமன்றம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்றும் அதற்கு ஏற்றவாறு தயாராகுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றம் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

ஜூலை 17ஆம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 26ஆம் தேதி நிறைவடையவிருந்தது. ஆனால் முத்தலாக் உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட மசோதாக்கள் இன்னும் நிலுவையில் உள்ளதால் பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நீடிக்க விரும்புகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.