ETV Bharat / bharat

கரோனா பீதி: நாடாளுமன்றம் பளீச்!

author img

By

Published : Mar 22, 2020, 11:48 AM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.

complex sanitised
complex sanitised

கரோனா பாதிப்பு நாடெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனிடையே நாடாளுமன்ற எம்பிக்கள் பலரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. கரோனாவை தடுப்பதற்கு கட்டுப்பாடும் விழிப்புணர்வும் மிக முக்கியமானவை என்றும், நாட்டு மக்களின் ஒற்றுமையான முயற்சியால் இந்தக் கொடிய தொற்றை எதிர்த்து போராடலாம் என, ஓம் பிர்லா கூறினார்.

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்ட சில நாள்களுக்கு முன்னர் பாஜக எம்.பி துஷ்யந்த் சிங், ஒரு விருந்தில் கலந்துகொண்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு பல எம்.பிக்களும் தங்களை தனிமைபடுத்திக்கொண்டனர்.

சுத்தமாகும் நாடாளுமன்றம்

இதன் பின்னர் தனது அலுவலகத்தில் நடைப்பெற்ற கூட்டம் ஒன்றில் நாடாளுமன்றத்தையும், அதைச் சுற்றி உள்ள பகுதியையும் சுகாதாரமாக வைக்கக்கோரி, ஓம் பிர்லா புது தில்லி மாநகராட்சி மன்றத்தினருக்கு அறிவுறுத்தினார். பிறகு கரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க... 'அனைவரும் ஒத்துழைப்போம், கரோனாவை விரட்டுவோம்'- அமித் ஷா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.