ETV Bharat / bharat

'இந்தா பிட் வச்சிக்கோ' - தேர்வறைக்கு சென்று மாணவர்களுக்கு சப்ளை!

மும்பை: யவாத்மல் பகுதியில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Mar 4, 2020, 4:03 PM IST

BIT
BIT

மகாராஷ்டிராவில் 10ஆம் வகுப்பின் மெட்ரிக் தேர்வுகள் நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், யவாத்மல் மாவட்டத்தின் மஹாகோன் நகரில் இயங்கும் ஜிலா பரிஷத் பள்ளியில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு, தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பெரும் கூட்டமே மாணவர்களுக்கு பிட் சப்ளை செய்கின்றனர்.

மாணவர்களுக்கு நேரடியாக தேர்வுறையில் பிட் கொடுத்த உறவினர்கள்

மாணவர்களுக்கு பிட் கொடுப்பதற்கு பள்ளியின் கட்டட சுவர் மீது ஏறி சென்று கொடுக்கும் காணொலி சமூல வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. தேர்வு நடைபெறும் இடத்தில் காவல் துறையினர் பாதுகாப்புக்கு இருந்தும் எப்படி இச்சம்பவம் நடைபெற்றது என கல்வி ஆர்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக மாநிலத் தேர்வு அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:நூதன முறையில் பணமோசடி: நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர் புகார்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.