300க்கும் குறைவான ஊழிர்களை கொண்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் அல்லது சிக்கலில் இயங்கும்பட்சத்தில் அவை தங்களை மூடிக்கொள்ளவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என நாடாளுமன்ற நிலைக்குழு முடிவெடுத்துள்ளது.
இதுவரை தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும்பட்சத்தில் அவை தங்கள் இயக்கத்தை நிறுத்துவதற்கு பெரும் சட்ட நடைமுறை சிக்கல் உள்ளன. இதன் காரணமாக பல்வேறு சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் நிதிச்சுமையிலிருந்து விடுபட முடியாமல் தவித்துவந்தன.
இந்த நிறுவனங்களின் தொடர் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற நிலைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே வரைவிலிருந்தச் சட்டம் 100 ஊழியர்களுக்கு குறைவான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
ஆனால் தொழில் நிறுவனங்களின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க இந்த வரைவில் மாற்றம் கொண்டுவரப்பட்டு எண்ணிக்கை 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கி சேமிப்புத் தொகை 9.45% உயர்வு - ரிசர்வ் வங்கி தகவல்